மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
பல தனியார் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் வி.ஜே.கதிரவன். இவர் கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். தற்போது இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்று(மே 29) இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கை மூண் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் கதிரவன். இந்த படத்திற்கு கூடு என்று தலைப்பு வைத்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்குகின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக்கில் கையில் பறவைகளின் கூண்டு மற்றும் அதில் உள்ள முட்டையை ஏந்தியபடி போஸ் தந்துள்ளார் கதிரவன்.