'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவரின் 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்கவுள்ளார். இதில் ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் தனுஷ் மும்பைக்கு சென்றுள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப், அட்ரங்கி ரே போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைக்காகவே அவர் மும்பை சென்றுள்ளார் என கூறப்படுகிறது.