'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
அபுதாபி: சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் சிறந்த இயக்குனராக ராக்கெட்டரி படத்தை இயக்கிய மாதவன் விருது பெற்றுள்ளார்.
அபுதாபியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா நடைபெற்றது. விழாவில் கோலிவுட், பாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் நடிகர் நடிகைகள், துணை நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
துவக்க விழாவில் பல்வேறு பாடல்களுக்கு நடிகர் நடிகைகள் நடனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.
சிறந்த திரைப்பட இயக்குனராக ராக்கெட்டரி படத்தை இயக்கிய மாதவன் தேர்வு செய்யப்பட்டார்.
துணை நடிகருக்கான விருதை விக்ரம் வேதா படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக்ரோஷன் பெற்றுக்கொண்டார்.
துணை நடிகைக்கான விருதை பிரம்மாஸ்திரம் படத்தில் நடித்த நடிகை மவுனிராய் பெற்றார்.
சிறந்த பேஷனுக்கான விருதை மணீஷ் மல்ஹோத்ரா பெற்றார்
சினிமாவில் மிகச்சிறந்த சாதனை படைத்ததற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்க கமல் பெற்றுக்கொண்டார்.
சிறந்த அறிமுக நடிகராக கங்குபாய் கதியவாடி படத்தில் சாந்தனு மகேஸ்வரி மற்றும் காலாவிற்காக பாபில்கான்
சிறந்த அறிமுக நடிகையாக தோகா அரவுண்ட் தி கார்னர் படத்தில் நடித்த குஷாலிகுமார்
சிறந்த பின்னணி பாடகியாக பிரம்மாஸ்திராவின் ரசியா பாடலுக்காக ஸ்ரேயா கோஷல்
சிறந்த பின்னணி பாடகராக பிம்மாஸ்திராவின் கேசரியா பாடலுக்காக அரிஜித்சிங்
சிறந்த பின்னணி இசைக்கான படமாக விக்ரம் வேதா தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த எடிட்டிங் படமாக த்ரிஷ்யம் -2
சிறந்த ஒளிப்பதிவு படமாக கங்குபாய் கதியவாடி
சிறந்த திரைக்கதை படமாக கங்குபாய் கதியவாடி
சிறந்த வசனம் படமாக கங்குபாய் கதியவாடி
தலைப்பு பாடலுக்கான சிறந்த நடன அமைப்பிற்காக பூல் புலையா-2 படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான படமாக பூல் பூலையா-2 படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த ஒலி கலவைக்கான படமாக மோனிகா ஓ மை டார்லிங் தேர்ந்தெடுக்கப்பட்டது.