அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் |

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது வரும் ஜூலை 14 அன்று இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை முதலில் தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக தகவல்கள் பரவியது. அதனால் தான் ரிலீஸ் தேதியில் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டது. தற்போது இப்படத்தை ஒரு சில காரணங்களால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதில் இருந்து விலகியுள்ள நிலையில் இப்போது லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தை தமிழகமெங்கும் விநியோகம் செய்கின்றனர். லைகா நிறுவனம் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் வைத்து டான் படத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




