175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதி புருஷ்' படத்தின் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் சற்று முன் யு டியூபில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்பாடல் வெளியாகி உள்ளது.
அஜய் - அதுல் இசையமைப்பில் உருவாகியுள்ள அப்பாடலை முரளிதரன் எழுதியிருக்கிறார். பாடலை ஆண் பாடகர்கள் சிலரும், பெண் பாடகர்கள் சிலரும் குழுவாகப் பாடியிருக்கிறார்கள்.
காட்டில் ராமன், லட்சுமணன் ஆகியோர் அனுமன் மற்ற வானரக் கூட்டங்களுடன் நடந்து செல்ல, ராமன் வருகைக்காக, இலங்கையில் இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதா காத்திருக்கும் காட்சிகள் அப்பாடலில் இடம் பெற்றுள்ளது. பாடலில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் நல்ல தரத்தில் அமைந்துள்ளது.
ஜுன் மாதம் 16ம் தேதி 'ஆதி புருஷ்' உலகம் முழுவதும் வெளியாகிறது.