தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 'புஷ்பா-2; த ரூல்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முக்கியமான கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், அதில் 'பன்வர் சிங் ஷெகாவத்' கதாபாத்திரத்தில் நடிக்கும் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதாகவும், அவர் இந்த முறை அதிகப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அமலாக்கத் துறை, வருமான வரி சோதனை என அப்படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் கடும் சோதனை நடைபெற்றது. அதனால், படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவை நிறைவுற்ற பிறகு ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டாம் பாகம் பற்றி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.