மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவிலும், தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற டாக்குமென்ட்ரி படம் சிறந்த டாக்குமென்டரி பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை பெற்றன. இதில் கார்த்திகி கொன்சால்வேஸ் என்பவர் இயக்கிய தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா என்பவர் தயாரித்திருந்தார்.
அதன்பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும்போது கையோடு ஆஸ்கர் விருதையும் தன்னுடன் தனியாக ஒரு பையில் எடுத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் குனீத் மோங்கா. அப்படி செல்லும்போது விமான நிலைய சோதனையில் இந்த ஆஸ்கர் விருது இருக்கும் பையை திறந்து காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறதாம்.
இதுகுறித்து குனீத் மோங்கா கூறும்போது, “இந்த விருதை கொண்டு செல்வதற்காகவே பிரத்தியேகமாக ஒரு கவருக்குள் இட்டு எடுத்து செல்கிறேன். என்றாலும் அது விமானநிலைய பரிசோதனையின்போது பளிச்சென தெரிய வருவதால் அங்கு இருக்கும் அதிகாரிகள் அது என்னவென்று கேட்கும்போது அதற்கு பதில் சொல்லியாக வேண்டி இருக்கிறது. உள்ளே இருப்பது ஆஸ்கர் விருது என்றதுமே உடனே அதை எடுக்கச் சொல்லி கேட்கிறார்கள். அந்த விருதை வெளியில் எடுத்ததும் அங்கு இருக்கும் அதிகாரிகள் ரொம்பவே ஆவலாக அந்த விருதுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் என்னுடன் ஒருவர் கூட புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டியது இல்லை.. அவ்வளவு ஏன், உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் கூட என்னை கண்டுகொள்ளாமல் ஆஸ்கர் விருதுடன் மட்டுமே புகைபடம் எடுத்துக்கொள்கிறார்கள்” என்று தனது மனக்குறையை வெளியிட்டுள்ளார்.




