22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கிடாரி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். அதன்பிறகு தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் அடுத்ததாக அவரது நடிப்பில் வாழி என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்த அயல்வாசி என்கிற திரைப்படம் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகிலா விமல் அளித்த ஒரு பேட்டியின் போது, கேரள மலபார் இஸ்லாமிய திருமணங்கள் குறித்து அவர் கூறுகையில், கண்ணூரில் நடக்கும் அது போன்ற திருமண நிகழ்வுகளில் அங்குள்ள பெண்கள், வீடுகளின் சமையலறை பக்கம் தான் உணவு பரிமாறுவார்கள் என்பது போன்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது. அவரது இந்த பேச்சுக்கு பல பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து நிகிலா விமல் கூறும்போது, “தற்போது வெளியாகி உள்ள செய்திகளில் கூறப்படுவது போல, எதையும் நான் சர்ச்சையாக கூறவில்லை. சொல்லப்போனால் எனது பேட்டியில் நான் கூறிய ஒரு கருத்தை திரித்து தவறாக வெளியிட்டுள்ளார்கள். அதனால் இது தொடர்பாக நான் யாருக்கும் விளக்கம் எதுவும் சொல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.