பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து தனியாக உருவானது நடப்பு தயாரிப்பாளர் சங்கம். இதன் தலைவராக பாரதிராஜா, செயலாளராக டி.சிவா, பொருளாளராக தனஞ்செயன் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் சினிமாவின் தாய் சங்கமாக, பாரம்பரியமாக இயங்கி வருகிறது. அதன் தலைவராக, உறுப்பினர்களின் பேராதரவுடன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, முரளி ராமசாமிக்கும், பொருளாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரபிரகாஷ் ஜெயினுக்கும், செயலாளராக மீண்டும் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள . ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசனுக்கும், துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்குமரன் மற்றும் அர்ச்சனா கல்பாத்திக்கும், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சௌந்தரபாண்டியனுக்கும், மற்றும் தேர்வாகியுள்ள 26 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சார்பில் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
முரளி ராமசாமி தலைமையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடந்த நிர்வாகத்தின் போது, திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக எப்படி இணைந்து பயணித்தோமோ, அதே போல இந்த முறையும் இணைந்து பயணிக்க, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர்வத்துடன் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.