சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றியவர் சம்பத்ராஜ். சரிகமகபதநி, சின்ன ஜமீன், மதுமதி, அமராவதி, காதல் கோட்டை, வான்மதி, என் சுவாசகாற்றே, புள்ள குட்டிக்காரன், உள்ளே வெளியே, காதலே நிம்மதி, மகாபிரபு, மக்களாட்சி உள்பட ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார்.
54 வயதான சம்பத்ராஜ் வளசரவாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு ரமணாஸ்ரீ என்ற மனைவுயம், மானஸ்ராஜ் என்ற மகனும் உள்ளனர். நேற்று மாலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சம்பத்ராஜ் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.