'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான சக்கரக்கட்டி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தனக்கென பெயர் சொல்லும்படி ஒரு வெற்றிப்படத்தை கொடுப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள ராவணக்கோட்டம் என்கிற படம் வரும் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். பாக்யராஜின் நலம் விரும்பியான தயாரிப்பாளர் கண்ணன் ரவி, பாக்யராஜுக்கு தான் செய்யும் நன்றிக்கடனாக சாந்தனுவுக்காக இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதனால் இந்த படத்தின் பட்ஜெட், தயாரிப்பு மேற்பார்வை பொறுப்பு என அனைத்தையும் பொறுப்பேற்று கவனித்து கொண்டார் சாந்தனு.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சாந்தனு, “இந்த படத்தில் 30 நாள் படப்பிடிப்பிற்காக நாங்கள் திட்டமிட்டு இருந்த பணம் 17 நாளிலேயே காலியாகிவிட்டது. தயாரிப்பாளர் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்து இருந்ததால் ஒவ்வொரு நாளும் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே சென்றது. பல்வேறு விதமான வழிகளில் படப்பிடிப்பு தலங்களில் ஏமாற்றியும் மிரட்டியும் சிலர் பணம் பறித்தனர். படப்பிடிப்பு சமயங்களில் யாருக்கும் தெரியாமல் தனியாக சென்று பத்து நிமிடம் கதறி அழுதிருக்கிறேன். ஒரு கட்டத்தில் பேசாமல் நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா, அதனால் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடுமா என்றெல்லாம் கூட யோசித்தேன். அதன்பிறகு மீண்டும் திட்டமிட்டு படத்தில் பணியாற்றியவர்களிடம் பேசி, அவர்களும் தங்களுக்கு பேசிய சம்பளத்தில் பெருமளவு விட்டுக்கொடுத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த படத்தை முடித்தோம்” என்று கூறினார்.