தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பொரங்கி என்னும் பகுதியில் நடைபெற்ற என்.டி.ஆர்., நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்சினிமா மூலம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் அதே போல் ஆந்திரா மாநிலத்திலம் சினிமா மூலம் அரசியலலுக்கு வந்து முதல்வரானவர் நந்தமுரி தாரக்க ராமராவ் என்ற என்.டி.ராமராவ். தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார்.
கடந்த 1950 ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க துவங்கிய ராமராவ் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடவுள் வேடத்திற்கு பொருத்தமானவர் .
தொடர்ந்து அரசியலில் பங்கேற்ற ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை துவக்கினார். மேலும் மக்களை சந்திக்கும் வகையில் சுமார் 7,500 கி.மீ தொலைவிற்கு பயணம் செய்துள்ளார். இதற்காக பிரத்யேகமாக வாகனத்தை தயார் செய்தார். அதற்கு சைதன்யரதம் என்றும் பெயரிட்டார். 1986 ம் ஆண்டில் நடைபெற்ற ஆந்திரா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில் 202 இடங்களை பெற்றார். தொடர்ச்சியாக மூன்று முறை மாநில முதல்வராக பதவி வகித்தார். சுதந்திரம் பெற்ற பின்னர் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எம்.ஜி.ஆர் மீது தனி பாசம் வைத்திருந்த என்.டி.ராமராவ் எம்.ஜி.ஆர். உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது அ.தி.மு.க..,விற்காக தமிழகத்தில் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது நூற்றாண்டு விழா இன்று (28 ம் தேதி ) கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினி, நடிகர் ராமராவின் மகன் பாலகிருஷ்ணா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் பங்கேற்ற சென்ற ரஜினியை விமான நிலையத்திற்கே வந்து அழைத்து சென்றார் பாலகிருஷ்ணா. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.