இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் |
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என பல படங்களை இயக்கியவர் ராம். இவர் தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. அதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் தான் டப்பிங் பேசிய வீடியோக்களை வெளியிட்டு இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதனால் ராம் இயக்கி உள்ள இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.