ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். ரகுல் பீர்த் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.ம் நிறுவனம் மற்றும் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல வருட கிடப்பில் கிடந்த இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ் அளித்த பேட்டியில், ‛‛இந்த படத்தில் வரும் அந்த ஏலியன் பொம்மைக்காக ரூ.2 கோடி செலவு செய்துள்ளோம். அதனுடைய அசைவு மட்டும் தான் கிராபிக்ஸ் செய்துள்ளோம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அந்த ஏலியனையும் அழைத்து வருவோம்.
அயலான் படம் ‛ஈ.டி' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் அல்ல. இந்த படத்தின் கதை முழுக்க வேறுப்பட்டு இருக்கும். இதற்கு முன்பு இந்திய சினிமாவில் 4000 வி.எப்.எக்ஸ் நிறைந்த காட்சிகள் கொண்ட திரைப்படம் பிரமஸ்தரா. ஆனால் அயலான் அதை விட அதிகமாக 4500 வி.எப்.எக்ஸ் காட்சிகள் நிறைந்த படமாக மாறியுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.