2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். அதனைத்தொடர்ந்து ‛விசில்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது 'குக் வித் கோமாளி - சீசன் 4'ல் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்தார் ஷெரின். அப்போது ரசிகர் ஒருவர், திருமணம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு, ‛ஒரு மாதத்தில் நடக்கும்' என ஷெரின் பதிலளித்தார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீபத்தில் ஒரு ரசிகர், என் திருமணம் எப்போது என்று கேட்டார். ஒரு மாதத்தில் நடக்கும் என்று ஜோக்கிற்காக சொன்னேன். அதை நம்பி பரப்பிவிட்டார்கள். நான் ஒரு மாதத்துக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் சொன்ன ஜோக் இவ்வளவு பெரிய செய்தியாகும் என்று நினைக்கவில்லை. எனக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.