அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' |

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் நினைவில் மீண்டும் கனவு கன்னியாக இடம்பிடித்தார் நடிகை ஷெரின். இருப்பினும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் குக் வித் கோமாளியில் குக்காக நுழைந்துள்ளார். இப்போது வரை குக் வித் கோமாளியில் நன்றாக பெர்பார்மன்ஸ் செய்து எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அண்மையில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒருவர் ஷெரினின் திருமணம் பற்றி கேட்க, 'ஜாதகத்தின் படி எனக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்ஸ்டா பில்டர் எனக்கு அடுத்த மாதத்தில் திருமணம் என்று சொல்லியிருக்கிறது. அதனால், நான் என்னுடைய திருமணத்தை ரொம்ப சீக்கிரமாகவே செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்' என கூறியுள்ளார்.
ஷெரினுக்கு சீக்கிரமே திருமணம் என்ற செய்தி ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




