நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். மேலும் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் என்றாலும், அவருடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி என்ற கிராமம்தான். ரஜினியின் பெற்றோர் இங்கிருந்து கர்நாடகத்தில் குடியேறிவிட்ட போதும் அவரது உறவினர்கள் இப்போதும் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த கிராமத்துக்கு ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா அவ்வப்போது சென்று வருகிறார். ஆனால் ரஜினி இதுவரை ஒரு முறை கூட தன்னுடைய பூர்வீக கிராமத்துக்கு சென்றதில்லை. என்றாலும் தன்னுடைய பெற்றோர் பிறந்து வளர்ந்த அந்த ஊரில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் தன்னுடைய பெற்றோருக்கு சிலை வைத்திருக்கிறார் ரஜினி. அதோடு அந்த கிராமத்து மக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் டேங்க் கட்டிக் கொடுத்திருப்பவர், கால்நடைகள் மற்றும் சாலையில் செல்வோர் தாகம் தீர்க்கும் வகையிலும் அங்கு தண்ணீர் குழாய்கள் அமைத்து கொடுத்து இருக்கிறார்.
இப்படி தங்களது தண்ணீர் பிரச்னையை தீர்த்த ரஜினி, சொந்த கிராமத்துக்கு ஒரு முறை கூட வராதது அங்குள்ள அவரது உறவினர்களுக்கு பெரும் குறையாக உள்ளதாம். அதனால் ஒரு முறையாவது ரஜினி தங்களை பார்க்க பூர்வீக கிராமத்துக்கு வரவேண்டும் என்று அங்குள்ள மக்கள் ரஜினிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.