ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் திரைக்கு வந்துள்ள படம் ருத்ரன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‛ராகவா லாரன்ஸ், கதிரேசன் இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருவதை கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்' அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல் இந்த ருத்ரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் சரத்குமாரும் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த பதிவில், ‛ருத்ரன் படத்தில் எதிர்நாயகனாக நடித்தமைக்கு பாராட்டி பெரும் வெற்றி படமாக்கி கொண்டாடி வரும் ரசிகப் பெருமக்களுக்கும், என் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டு இருக்கிறார்.