திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
யூ-டியூப் பிரபலமான வீஜே பார்வதி நேற்றைய தினம் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இளைஞர்களின் பேவரைட் வீஜேவான பார்வதிக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். பார்வதிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் சொல்லும் அதே நேரத்தில் சிலர் வழக்கம் போல் 'ஆன்டி உங்களுக்கு 27 வயசா? நம்பிட்டோம்' என கிண்டலடித்தும் வருகின்றனர். இதனால் அப்செட்டான பார்வதி, 'ஏன் யாரும் என்னோட வயச நம்ப மாட்றாங்க? சத்தியமா சொல்றேன் எனக்கு 27 வயசு தான். ஹிப்ஹாப் தமிழாவோட ஆன்டி கன்டன்ட் வைரலானதாலும், நான் அதிகமா பேசுறதாலும் நான் பெரிய பொண்ணுன்னு நினைக்கிறாங்க. அட இல்லப்பா. நம்புங்களேன்' என பதிவிட்டுள்ளார். எனினும், நெட்டிசன்கள் பார்வதியை விடாமல் கலாய்த்து வருகின்றனர்.