தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சிம்ரன். பல படங்களில் நாயகியாக நடித்தாலும், இவரது நடன அசைவுக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். சில படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் குழந்தைக்கு தாய் போன்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். குறித்தாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து பாராட்டை பெற்றார். தற்போது நடிகர் சசிகுமாருடன் ‛டூரிஸ்ட் பேமிலி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கி வரும் ‛தி லாஸ்ட் ஒன்' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்ரன் பேசியதாவது: சமீபத்தில் சக நடிகையிடம் ஒருவரிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, 'உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது' என அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம்.
நான் 25 வயதிலேயே முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தமாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் நடித்துள்ளேன். ‛டப்பா' கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தில் நடிக்கலாம்'' என காட்டமாக பேசினார் சிம்ரன். அவர் குறிப்பிட்ட அந்த நடிகை யாராக இருக்கும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர்.




