பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
கடந்த 2020ல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, அவரது மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டது.. போதைப்பொருள் தடுப்பு துறை அவரிடம் செய்த விசாரணையில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருளை வரவழைத்து கொடுத்தார் என்பதுடன், மேலும் பல நடிகைகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்வது தொடர்பாக ரியாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ரியா.
சில மாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார் ரியா. ஆனால் முன்னைப்போல் படங்களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ ரியா நடிக்கவே இல்லை. இந்தநிலையில் கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் கேமரா முன் வந்து நின்றுள்ளார் ரியா. இதுகுறித்து அவர் கூறும்போது, “மூன்று வருடங்களாக எந்த படப்பிடிப்பிலும் நான் கலந்துகொள்ள வில்லை. கடந்த சில வருடங்களாக மேக்கப், சிகை அலங்காரம் என எதுவும் நடக்காததால் இந்த கேரவன் ஒப்பனை அறை கூட எனக்கு புதிது போன்ற ஒரு உணர்வை தருகிறது” என்று கூறியுள்ளார்.