'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம் | பீரியட் படத்தில் நடிப்பது பெருமை : டொவினோ தாமஸ் | 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா | ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் |

நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் தன்னிடம் இருந்த சுமார் 6 ஆயிரம் புத்தகங்களை தானமாக வழங்கி வருகிறார். தனது வீட்டின் முன்னால் தினமும் சில நூறு புத்தங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறார். அதனை பொதுமக்கள் பார்த்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6 ஆயிரம் புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று எண்ணினேன். இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன். புத்தக வாசிப்பை அதிகப்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்'' என்கிறார்.




