அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் |
விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள், 'ஆன்லைன்' வாயிலாக துவங்கப்பட்டுள்ளன. அதற்கு உதவும் வகையில், 'இன்ஸ்டாகிராம்' வலைதளத்தில் கணக்கு துவக்கிய விஜயை, ஒன்றரை மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் பின்தொடரும் சாதனை நடந்துள்ளது.
இதில் உலக அளவில், மூன்றாம் இடத்தில் விஜய் இருக்கிறார். தற்போது, அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், வரும் 14ல், அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம்தோறும் நடக்கும் இவ்விழாவில், அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், முன்கூட்டியே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், நேற்று நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசியல் ஆசையோடு இருக்கும் விஜய், அதற்கு முன்னோட்டமாக தலித் சமுதாயத்தின் ஆதரவை பெறும் நோக்கில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.