''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பாரதிராஜாவுடன் அருள்நிதி இணைந்து நடித்திருக்கும் படம் 'திருவின் குரல்'. அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கி இருக்கிறார், அருள்நிதி ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார், சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். வருகிற 14ம் தேதி படம் வெளிவருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் குறித்து அருள்நிதி கூறியதாவது: த்ரில்லர் கதைகளையே தேர்வு செய்து நடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்று யோசித்தபோதுதான் இந்த படத்தின் கதை வந்தது. இதில் நான் வாய்பேச முடியாத செவித்திறன் குறைபாடு நிறைந்த இளைஞனாக நடித்திருக்கிறேன். பிருந்தாவனம் படத்திலும் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நடிக்க பயிற்சி அளித்த விஜயாதான் இந்த படத்திற்கும் பயிற்சி கொடுத்தார்.
ஆனால் கதை முற்றிலும் வித்தியாசமானது. கதைப்படி எனது அப்பாவுக்கு (பாரதிராஜா) திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு எனக்கும், ஆஸ்பத்திரியில் உள்ளவர்களுக்கு இடையில் உருவாகும் ஈகோ பிரச்சினைதான் கதை. ஆத்மிகா எனது அத்தை மகளாக நடித்திருக்கிறார்.
எனது நடிப்பு திறமையை முழுமைகாக வெளிக்கொண்டு வர இந்த படம் வாய்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவமனையில் உள்ள சில மனிதாபிமானமற்ற மனிதர்கள், சாதாரண மக்களை அரசு மருத்துவமனைகள் எவ்வாறு நடத்துகின்றனர். என்பதை இயல்பாக சொல்கிற படமாக உருவாகி இருக்கிறது. என்றார்.