நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், நானி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் 'தசரா'. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டார்கள்.
தற்போது இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நானி கதாநாயகனாக நடித்த படமொன்று 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. நானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பு, சந்தோஷ் நாராயணன் இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு ஆகியவை இந்தப் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டது.
100 கோடி வசூலைக் கடந்ததன் மூலம் நானி, தெலுங்கு கதாநாயகர்கள் வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை மூன்றாம் கட்ட கதாநாயகனாக மட்டுமே இருந்த நானி, இந்தப் படத்தின் வெற்றி மூலம் முன்னணி கதாநாயகர்களுடனும் போட்டி போட ஆரம்பித்துள்ளார்.
'தசரா' படத்தை பல தெலுங்கு சினிமா பிரபலங்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.