ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். அந்நிறுவனம் மூலம் சுமார் 10 படங்கள் வரை தயாரித்துள்ளார். பைனான்ஸ் வாங்கித்தான் அவர் படங்களைத் தயாரித்து வந்தார். அந்த வகையில் பிரபல பைனான்சியரான அன்புச் செழியனிடம் சுமார் 21 கோடி கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை பின்னர் லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
அந்தக் கடனை விஷால் திரும்ப அடைக்கும் வரை அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமைகளை லைக்காவுக்கு தர வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அதன்பின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த 'வீரமே வாகை சூடும்' படத்தின் உரிமைகளை லைக்காவுக்குத் தரவில்லை. அதனால், லைக்கா நிறுவனம் விஷால் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிமன்றத்தில் விஷால் தரப்பு 15 கோடியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்தப் பணத்தை செலுத்தாமல் மேல் முறையீடு செய்தார் விஷால். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி முன்னர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் எந்த புதிய படங்களையும் வெளியிட தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
'வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் எந்தப் படத்தையும் தயாரிக்கவில்லை. அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'லத்தி' படத்தை அவரது நண்பர்களான நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோர்தான் தயாரித்தனர். தற்போது அவர் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' படமும் வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படம்தான்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து விஷால் அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் இப்போதைக்கு எந்தப் படங்களையும் தயாரிக்க வாய்ப்பில்லை. மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்தால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.