வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பொதுவாக எந்த ஒரு மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானாலும் அதில் ஏதோ ஒரு படத்தின் மூலம் தான் வருடத்திற்கு ஒரு கதாநாயகனாவது ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக கிடைக்கிறார்கள். அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் பிரபலம் ஆகிறார்களா இல்லையா என்கிறது தனிக்கதை. ஆனால் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மலையாள நடிகர் தேவ் மோகன் கதையோ கொஞ்சம் வித்தியாசமானது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சூபியும் சுஜாதையும் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் இந்த தேவ் மோகன். அந்த படத்தில் நடிகை அதித்தி ராவ் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரெயின்போ என்கிற படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தேவ் மோகன். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெளிச்சம் பெற்றுள்ளார் தேவ் மோகன். இனி வரும் காலங்களில் போகப்போக இந்த வாய்ப்புகள் மூலம் எப்படி அவர் தன்னை வளர்த்துக் கொள்கிறார் என்பதில் தான் அவரது திரையுலக பயணத்தின் வெற்றி அமையும்.