அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

கலையரசன், மிர்னா நடித்துள்ள புதிய படம் புர்கா. எஸ்.கே.எல்.எஸ் கேலக்ஸி மால் என்ற நிறுவனத்தின் சார்பில் சாரா மோகன், தினகர் பாபு தயாரித்துள்ளனர். இதை சர்ஜுன் இயக்கி உள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சிவாத்மிகா இசை அமைத்துள்ளார். அனுசுயா வாசுதேவன் திரைக்கதை அமைத்துள்ளார்.
இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவின் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டால் பிரச்னைகள் உருவாகலாம், தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் எழலாம் என்பதால் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற 7ம் தேதி வெளியாகிறது.