ஜுன் 1, 2022ல் டிரைலர் வெளியீடு : ஜுன் 1, 2023ல் பட வெளியீட்டு அறிவிப்பு | ஜுன் 9ம் தேதி லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் | “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் | பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் யு டியுபில் வெளியிடப்பட்டது.
முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அதன் டிரைலருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது என்பதைப் பார்ப்போம். தமிழ் டிரைலர் 8.4 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் 5.1 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 2 மில்லியன் பார்வைகளையும், கன்னடம், மலையாளம் டிரைலர்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளன.
முதல் பாக தமிழ் டிரைலர் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இரண்டாம் பாகத்தின் டிரைலருக்கான பார்வை அதில் பாதி எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. இருப்பினும் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் சீக்கிரத்திலேயே அதிகப் பார்வைகளைப் பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரைலருக்கான வரவேற்பு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. பட வெளியீட்டிற்கு முன்பாக படத்தைப் பற்றி இன்னும் அதிக அளவில் படக்குழு பிரபலப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.