'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் முடித்து சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையும் ஆனார். விரைவில் ராஜ் கமல் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் ஒன்றை இயக்கிவுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் அக்கவுண்டை மீட்கப்பட்டுள்ளதாக டுவீட் செய்துள்ளார். அவர் கூறியது " இன்று என் டுவிட்டர் கணக்கை மீட்டுள்ளேன். ஆனால் டுவிட்டர் கணக்கு இல்லாத இந்த ஒரு வாரம் நிம்மதியுடன் இருந்தேன். என் அக்கவுண்ட் ஹேக் செய்தவர்களுக்கு நன்றி. அப்பப்ப பண்ணுங்க(ஹேக்) என பதிவிட்டுள்ளார்". அதோடு அவரது குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் இப்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.