மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
தமிழ் சினிமாவில் ஒரே படத்திலேயே இரண்டு கதாநாயக நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்கள் என்பதெல்லாம் மிகவும் அபூர்வம். அடுத்த வாரம் மார்ச் கடைசி வாரத்தில் வெளியாக உள்ள இரண்டு முக்கிய படங்களில் இரண்டு கதாநாயக நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ள 'பத்து தல' படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், மார்ச் 31ம் தேதி வெளியாக உள்ள 'விடுதலை' படத்தில் சூரி, விஜய் சேதுபதி என இரண்டு படங்களிலும் இரண்டிரண்டு நாயகர்கள் நடித்துள்ளார்கள்.
'பத்து தல' படத்தை ஒபிலி கிருஷ்ணா இயக்க, ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்த 'முப்டி' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம்.
'விடுதலை' படத்தை வெற்றிமாறன் இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு படங்களுமே ஆக்ஷன் படங்கள், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ள படங்கள், முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் என ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கக் கூடிய அம்சங்களுடன் உள்ளன. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் படங்கள் வெற்றிப் படங்களாக அமையுமா என்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.