மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? |
லக் ஸ்டோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் முகமது மன்னார் தயாரிக்கும் படம் 'சுமோட்டா'. இப்படத்தை இராமசாமி. பி.ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். கதாநாயகனாக "நிசப்தம்" படப் புகழ் அஜய் ஸ்ரீதரும், கதாநாயகிகளாக பனிமலர் பன்னீர் செல்வமும், அம்சரேகாவும் நடித்துள்ளனர். வில்லனாக இயக்குனர் லியாகத் அலிகான் நடித்துள்ளார். ஒளிப்பதிவு இளையராஜா வேலுசாமி, இசை வாரென் சார்லி.
படம் பற்றி இயக்குனர் இராமசாமி பி.ராஜா கூறியதாவது: கொரோனா தொற்றின் முதல் அலையில் அதிகாரத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்காக மாநில மனித உரிமை ஆணையம் தலையிட்டு தானாக வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க வழி செய்வதே இத்திரைப்படத்தின் கதை. இந்தியாவில் முதன்முதலில் எடுக்கப்பட்ட மனித உரிமை ஆணையம் பற்றிய முழு நீளத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.