மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரின் 30வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார். கொரட்டல சிவா இயக்குகிறார்.
படத்தின் பணிகளை இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமவுலி கிளாப் அடித்து துவக்கி வைத்தார், கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் கேமராவை இயக்கினார். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பாளர் தில் ராஜு, என்டிஆரின் சகோதரர் கல்யாண் ராம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுள்ளது. இது பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது. ஐதராபாத்தைத் தவிர, விசாகப்பட்டினம் மற்றும் கோவாவில் அமைக்கப்பட்டுள்ள செட்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நந்தமுரி தாரக ராமராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவ சுதா ஆர்ட்ஸ் பேனரில் மிக்கிலேனேனி சுதாகர் தயாரிப்பாளராக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.