அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகை ஜீவிதா சின்னத்திரையில் பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். தவிர, கடைக்குட்டி சிங்கம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் குறித்து பேசியிருந்த வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. திறமையான நடிகையாக இருந்தும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் 300 பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக ஜீவிதா பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், 'படத்தில் எனக்கு இரண்டாவது ஹீரோயின் என்று சொன்னார்கள். கொஞ்சம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் காட்சியில் தான் என்று நினைத்து உடையிலா, அல்லது நெருக்கமான காட்சியா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இயக்குநருடன் நீங்கள் அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும். முதலில் இயக்குநர், அடுத்தது தயாரிப்பாளர், அடுத்தது கேமரா மேன், அடுத்தது ஹீரோ என ஓவ்வொருவராக உங்கள் ரூமுக்கு வருவார்கள் என்று சொன்னார்கள். இதற்கெல்லாம் சம்மதித்தால் எதிர்பார்த்ததை விட அதிக சம்பளத்துடன் அடுத்தடுத்த பட வாய்ப்பும் கிடைக்கும் என்றார்கள். நான் முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்' என்றார்.
அதுபோல மீடூ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 'நாலு சுவருக்குள் அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து புகழ், பணம் சம்பாதித்துவிட்டு நான்கு வருடங்கள் கழித்து அவர்களை குற்றம் சொல்வது ஞாயமில்லை. நம்மிடம் ஒருவர் தவறாக அப்ரோச் செய்தால் அதை அப்போதே மறுத்துவிட வேண்டும்' என்று கூறியுள்ளார். ஜீவிதா பல ஊடகங்களில் கொடுத்த பேட்டிகளானது துண்டு வீடியோக்களாக தொகுக்கப்பட்டு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.