திரௌபதி 2 படப்பிடிப்பு நிறைவு | 2026 ஜூன் 12ல் 'ஜெயிலர் 2' ரிலீஸ் : ரஜினிகாந்த் தகவல் | விஷாலின் 'மகுடம்' படப்பிடிப்புக்குச் சென்று வாழ்த்திய டி ராஜேந்தர் | 150 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | காப்பிரைட் வழக்கு : ஏஆர் ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து | 'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதை குறித்து ஈஸ்வரியிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைகள் மீட்புஇந்த நிலையில் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுளனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது. ஈஸ்வரியிடம் போலீஸ் நடத்தி வந்த விசாரணையில் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் உதவியோடு சிறிது சிறிதாக சுமார் 100 பவுன் வரை தங்க நகைகள் திருடி உள்ளார்கள். இது அல்லாமல் 30 கிராம் டைமண்ட், வீட்டு பத்திரம், 4 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.