ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? |
தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கம் சென்னையில் உள்ளது. இதன் தலைவராக இடையில் சில ஆண்டுகள் தவிர தொடர்ந்து ராதாரவி இருந்து வருகிறார். ராதாரவி மீது ஏற்கெனவே பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. மீடூ குற்றச்சாட்டுகளும் இருந்தது. இந்த நிலையில் புதிதாக சங்க கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது சங்க கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராதாரவி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிட விதிமீறல் புகார் எழுந்தபோது நான் பொறுப்பில் இல்லை. அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் இப்போது இல்லை. கட்டிடத்துக்கு எனது பெயரை வைக்க முடிவு செய்தபோது வேண்டாம் என்று மறுத்தேன். டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டியதை எதிர்த்து வழக்கு போட்டதும், வக்கீல் மூலம் கோர்ட்டில் முறையான விளக்கம் அளித்தோம்.
மாநகராட்சி சார்பில் ஒரு மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் வந்து இருக்கலாம். வராமலும் இருக்கலாம். படப்பிடிப்பு உள்ளிட்ட வேறு பணிகளில் நான் தீவிரமாக இருந்ததால் நோட்டீஸ் என் கவனத்துக்கு வரவில்லை. டப்பிங் அலுவலகம் வேறு இடத்தில் தொடர்ந்து செயல்படும். சீல் வைக்கப்பட்ட கட்டடத்தை திறக்க கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம். டப்பிங் சங்கத்துக்கு என்னை தொடர்ந்து தலைவராக தேர்வு செய்து வருவதால் சிலருக்கு பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது. அதன் விளைவாகவே இப்படி நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.