லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! | தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை | புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா |
ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் இந்தியன்-2 படக் குழுவை முற்றுகையிட்டு கோயிலுக்கு நன்கொடை கேட்டு உள்ளார்கள். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததை அடுத்து அங்கு நிலவிய பரபரப்பு ஓய்ந்திருக்கிறது.