2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடிக்கடி நடிகர்கள் மாரி வருகின்றனர். இதுவரை 5 கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் மாறிவிட்டனர். அதிலும் இரண்டு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டும் 5 முறை நடிகைகள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தொடர் குடும்பங்களுக்கு பிடித்த தொடராக தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நீண்டநாட்களாக நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது சீரியலை விட்டு விலகியுள்ளார். ஏற்கனவே, இந்த கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலியும் அதன்பின் வீஜே தீபிகாவும் நடித்து வந்தனர். இதில் தீபிகாவின் முகத்தில் சரும பிரச்னை அதிகம் இருந்ததால் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தான் சாய் காயத்ரி நடித்து வந்தார். தற்போது சாய் காயத்ரி விலகிவிட்ட நிலையில் வீஜே தீபிகா மீண்டும் சரவணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் தீபிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.