சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
விஜய்க்கும், அவரது தந்தையான இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெற்றோரை அவர் தவிர்த்ததாக விமர்சனம் எழுந்தது. அதோடு வாரிசு என்ற குடும்ப சென்ட்டிமென்ட் படத்தில் நடித்த விஜய் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த பெற்றோரை சம்பிரதாயமாக மட்டுமே வரவேற்றார் என்றும் இணையதளத்தில் தொடர்ந்து அவருக்கு எதிரான கமெண்ட்டுகள் வலம் வந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் அளித்த ஒரு பேட்டியில் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், பிரமாண்டமாக நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நாங்களும் விருந்தினராகவே கலந்து கொண்டோம். ஆனால் அந்த விழாவில் விஜய் எங்களை வரவேற்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். எங்களை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எங்களை அவர் வரவேற்று தனியாக நேரத்தை செலவிடுவதற்கான இடம் அதுவல்ல. அது அவர் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா. அவரை காண வேண்டும் என்பதற்காகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு வருகிறார்கள். அவ்வளவு ரசிகர்களும் விஜய் மீது செலுத்திய அன்பை நேரில் பார்க்கும்போது, அவரை பெற்றவர்களான எங்களுக்கு சந்தோசமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மற்றபடி விஜய் எங்களை தவிர்த்தார் என்று சொல்வதெல்லாம் தவறு. தேவையில்லாமல் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்கிறார் ஷோபா.