தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
‛பரியேறும் பெருமாள், கர்ணன்' படங்களைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருந்தார் மாரி செல்வராஜ். திடீரென்று உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‛மாமன்னன்' படத்தை இயக்கத் தொடங்கியதால் அந்த படத்தை தள்ளி வைத்திருந்தார். தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றன.
இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்பு முடிந்ததும் ‛வாழை' என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய மாரி செல்வராஜ் அந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்து விட்டார். இந்தபடமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் துருவ். மேலும் கபடி விளையாட்டு தொடர்பான படம் என்பதால் அதற்கான பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு, மூன்று மாதத்தில் இந்த படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். அனேகமாக ஜூலையில் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.