முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த சில மாதங்களாக தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அதன்பின் உடல்நலம் தேறி தற்போதுதான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து வரும் 'குஷி' படத்தின் படப்பிடிப்பு சமந்தாவின் உடல் நிலையைக் கருதி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது சமந்தா அப்படத்திற்காக மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
நேற்று சமந்தா 'குஷி' படப்பிடிப்பிற்கு மீண்டும் வந்தது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு நேற்று படப்பிடிப்புத் தளத்தில் மகளிர் தினத்தையும் கேக் வெட்டி கொண்டாடினார் சமந்தா.
தெலுங்கில் சமந்தா நடித்து முடித்துள்ள 'சாகுந்தலம்' படம் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.