பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி |
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1975ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக அப்படம் வெளிவந்தது.
நேற்று திடீரென 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படி ஒரு அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக 'சார்பட்டா பரம்பரை 2' படத்தை இயக்கி முடிப்பார் எனத் தெரிகிறது. கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் வரை நடக்கும் என்கிறார்கள். பா ரஞ்சித் இயக்கி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். கமல்ஹாசன் வரும் வரை காத்திருக்காமல் அதற்குள் 'சார்பட்டா பரம்பரை 2' படத்தை இயக்கி முடிக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம்.
முதல் பாகத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அப்போது கொரோனா தாக்கம் இருந்ததால் அப்படி நடந்தது. அப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்தை தியேட்டர்களில்தான் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.