கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மறைந்த நடிகர் முத்துராமனின் மகனாக வாரிசு நடிகராக அடியெடுத்து வைத்த கார்த்திக், முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகனாக மாறினார். தொடர்ந்து தனது திரையுலக பயணத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தார். அதேபோல் அவரது வாரிசாக, அவரது மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்கிற படத்தின் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். அந்த வகையில் தற்போது திரையுலகில் 10 வருடங்களை கடந்துள்ள கவுதம் கார்த்திக் முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி படங்கள் எதையும் பரிசாக பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து அவர் நடித்துள்ள பத்து தல என்கிற திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த மப்டி என்கிற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளரான என்.எஸ் பொன் குமார் என்பவர் இயக்கத்தில் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்திலும் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படம் சுதந்திரப் போராட்டம் பற்றிய கதையாக இல்லாமல் சுதந்திரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவனாக ஆக்ரோஷமும் கோபமும் கொண்ட இளைஞனாக நடித்துள்ளார் கவுதம் கார்த்திக். இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை வெற்றிகரமாக காதல் திருமணம் செய்து கொண்ட கவுதம் கார்த்திக், அதேபோல அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இந்த படங்களின் மூலம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றி ஒன்றை பெறுவாரா, தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.