ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு |

நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அந்நிறுவனம் படங்களைத் தயாரித்து வருகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களை மட்டுமே அதிகமாகத் தயாரித்து வந்த அந்நிறுவனம் அவ்வப்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளது.
சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த 'மகளிர் மட்டும்', மாதவன் நடித்த 'நளதமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்துள்ளது. 40 வருடங்களில் 4 படங்கள்தான் மற்ற நடிகர்களின் படங்கள்.
ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அடுத்து சிம்பு நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவை தவிர இன்னும் சில இளம் நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம். அவை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.