“ரசிகர்களின் ரசனைமிகு வில்லன்” நடிகர் ரகுவரன். | 'ரொம்ப வலிக்குது' : மகள் பற்றி விஜய் ஆண்டனி மனைவி உருக்கம் | இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய இசைக்குயில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி. | அம்பிகா, ராதா ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளுக்குத் தடை ? | 3 மணி நேரம் ஓடப் போகும் 'சலார்' | ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! |
மலையாள தயாரிப்பாளர் சிஜூ தமீன்ஸ் தயாரிக்கும் தமிழ் படம் 'மெமரீஸ்'. இதனை மலையாள இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷியாம் பர்வீன் இயக்குகிறார். மலையாள நடிகை பார்வதி அருண் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன வெற்றி, தனன்யா, ரமேஷ் திலக், ஹரீஷ் பெரடி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஷியாம் பர்வீன் கூறியதாவது: வெற்றி, 'ஜீவி' படத்தில் நடிக்கும் முன்பே இந்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம். கொரோனா காலத்தால் சற்று தாமதமாகி விட்டது. கொரோனா காலத்துக்கு முன்பு வரை மலையாள சினிமா ஒரு சில குறிப்பிட்ட ஹீரோக்களை சுற்றித்தான் இருந்தது. புதுமுகங்களின் படங்களுக்கு வியாபாரம் இல்லாமல் இருந்தது. தற்போது ஓடிடி தளத்தின் வருகைக்கு பிறகு இந்த நிலை மாறிவிட்டது.
இதன் காரணமாக மலையாள இயக்குனர்களுக்கு தமிழ் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். காரணம் இங்கு புதியவர்களின் சினிமாவுக்கும் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து வருகிற 10ம் தேதி படம் வெளிவருகிறது.
சினிமா இயக்குனராக துடிக்கும் ஒரு இளைஞனுக்கு திடீரென தனது நினைவுகள் மறந்து விடுகிறது. தன்னை யார் என்றே அவனுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் அவன் மீது சில கொலை பழிகள் சுமத்தப்படுகிறது. அவற்றில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.