இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மும்பையில் உள்ள நடிகர் அமிதாபச்சனின் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக யாரோ மர்ம நபர் நாக்பூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்திருக்கிறார். அதையடுத்து நாக்பூர் போலீசார் மும்பை காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்குள்ள போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அமிதாப்பச்சனின் வீட்டை சோதனை செய்துள்ளார்கள். ஆனால் இந்த தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லையாம்.
அதைபோல் நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக இன்னொரு மர்ம போன் காலும் வந்திருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மும்பை போலீசார் தற்போது அலார்ட்டாகி இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.