2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையாளராக வலம் வருபவர் இயக்குனர் வினீத் சீனிவாசன். கடந்தாண்டு இவர் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் உள்ள வரநாடு என்கிற பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மற்றும் மலையாள பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் வினீத் சீனிவாசன்.
அதேசமயம் அந்த நிகழ்வில் அவர் விழா மேடையில் இருந்து வாசலுக்கு செல்லும் நடைபாதையில் வேகமாக ஓடிவருவது போன்று ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. குறிப்பாக ரசிகர்களின் சந்திப்பை தவிர்க்கவும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவும் அவர் அப்படி ஓடினார் என பலரும் கிண்டல் அடித்தும் வந்தார்கள்.
இந்த நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வினீத் சீனிவாசன், “அந்த விழாவிற்கு நான் வருகை தந்தபோது கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகளின்படி அங்கே காரை நிறுத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை.. நான் கிளம்பும் நேரம் வந்ததும் வெளியே அவ்வளவு கூட்ட நெரிசல்களுக்கு இடையே தான் என்னுடைய கார் என்னை பிக்கப் செய்துகொள்ள வந்து கொண்டிருந்தது. நான் வேகமாக சென்றால்தான் மேலும் ட்ராபிக்கை ஏற்படுத்தாமல் காரில் ஏறி செல்ல முடியும் என்பதற்காக தான் சற்றே வேகமாக சென்றேன். ஆனால் அப்படி நான் சென்றதை இந்த விதமாக கிண்டல் அடிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.