
ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
பிப் 27, 2023
Advertisement
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்", டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், அடுத்தபடியாக அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள சொப்பன சுந்தரி என்ற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் அவருடன் லட்சுமி பிரியா, கருணாகரன், சதீஷ் உள்பட பல நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் டிரெய்லரும் வெளியாக இருப்பதோடு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது. இதுதவிர, விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!