விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! |
இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற மதிக்கப்படுகின்ற இயக்குனராக மாறியுள்ளார். கடந்த வருடம் இவரது இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தில் மரகதமணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடல் கோல்டன் குலோப் விருது பெற்றதுடன், ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் நாமினேசன் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இயக்குனர் ராஜமவுலியிடம் இந்திய மொழிகளில் வெளியான கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து படங்களை பட்டியலிடுங்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஜமவுலி சங்கராபரணம், முன்னாபாய் எம்பிபிஎஸ், பண்டிட் குயீன், பிளாக் பிரைடே மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என ஐந்து படங்களை குறிப்பிட்டார். மேலும் ராஜமவுலி என்று அழைக்கப்படுகின்ற ஒருவரால் இயக்கப்பட்ட ஈகா என்கிற படத்தையும் மறந்துவிட வேண்டாம் என அவர் தன்னுடைய படம் குறித்தும் கலாட்டாவாக குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து ஆடுகளம் பட தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் இந்திய சினிமாவே போற்றி புகழ்கின்ற ஒரு மாபெரும் இயக்குனர் எங்களது ஆடுகளம் படத்தை பற்றி பாராட்டியதுடன் பார்க்க வேண்டிய ஐந்து படங்களில் பட்டியலில் ஒன்றாக அதை குறிப்பிட்டு எங்களை மிகவும் பெருமைப்படுத்தி விட்டார் என அவருக்கு நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றியை தெரியப்படுத்தி உள்ளனர்.