நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கங்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து என்ற இயக்கத்தை துவங்கியுள்ளது. போதை பழக்கத்திலிருந்து தமிழகத்தை காக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்தை போதையின் பிடியில் இருந்து மீட்கவும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தொடங்கி வைத்தார். ஏராளமானோர் இந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோரும் இதில் கையெழுத்திட்டார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார். இப்படி போதையற்ற தமிழ்நாடு இயக்கத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கையெழுத்திட்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.